

நம்மாழ்வார் அவதார தினம் மே 27
வேதம் தமிழ் செய்த மாறன் என்ற சிறப்பு நம்மாழ்வாருக்கு உண்டு. இவர் திருமால் மீது 1000-க்கும் மேற்பட்ட பாசுரங்களைப் பாடியுள்ளார்.
இவரின் பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி ஆகியவை ஆகும். இவரே திருமாலின் திருவடி எனப் போற்றுவதற்கு அத்தாட்சியான சடாரியைப் பெருமாள் கோயில்களில் காணலாம்.
நம்மாழ்வாரின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 22.05.15 முதல் 01.06.15 வரை ஆழ்வார் திருநகரியில் உற்சவம் நடைபெறும்.
இதில் 5-ம் நாளான நம்மாழ்வார் திருநட்சத்திரமான வைகாசி விசாகத்தன்று ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள நவ திருப்பதி எம்பெருமான்கள் அனைவரும் இத்தலத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுவர்.
பக்தனுக்காகப் பரந்தாமன் பறந்தோடி வந்து காட்சி அளிப்பதாகக் கொள்ளலாம்.
படங்கள்: எம்என்எஸ்