

திருமலை: திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நேற்று 2-ம் நாள் பவித்ரோற்சவம் சிறப்பாக நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர விழாவாக பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவ்விழா தொடங்கியது.
2-ம் நாளான நேற்று, காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து விலை உயர்ந்த பட்டு நூல்களான பவித்ர மாலைகள் உற்சவ மூர்த்திகளுக்கும், விமான வெங்கடேஸ்வரருக்கும் அணிவிக்கப்பட்டது. இதில் ஜீயர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.