ஆனி மாத நட்சத்திர பலன்கள் - விசாகம், அனுஷம், கேட்டை

ஆனி மாத நட்சத்திர பலன்கள் - விசாகம், அனுஷம், கேட்டை
Updated on
2 min read

விசாகம்

வாக்கு திறமையும் எளிதில் கோபம் அடையாத குணமும் கொண்ட விசாக நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புக்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் தலை தூக்கும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பெண்களுக்கு எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சிக்கல்கள் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: திங்கள் கிழமையில் அங்காளம்மனை தீபம் ஏற்றி வணங்க மன கவலை தீரும். எதிர்ப்புகள் அகலும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும்.

+: மனவலிமை அதிகரிக்கும்

-: வாகனங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை

அனுஷம்

எதற்கும் கலக்கமோ, அதிர்ச்சியோ அடையாத அனுஷம் நக்ஷத்திர அன்பர்களே, நீங்கள் வசீகர பேச்சாற்றல் கொண்டவர். இந்த மாதம் எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும். அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற அதிகமாக படிக்க வேண்டி இருக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகத்தில் சூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

+: உற்சாகம் அதிகரிக்கும்

-: குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கலாம்.

கேட்டை

சாந்தமும், அமைதியும் உடைய கேட்டை நக்ஷத்திர அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.

குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை.

பெண்கள் எண்ணப்படி காரியங் களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.

மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனை தீபம் ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதுரியத்தை தரும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.

+: தொழிலில் விரிவாக்கம் ஏற்படும்

-: வீண் செலவுகள் ஏற்படும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in