Published : 16 Dec 2016 12:09 PM
Last Updated : 16 Dec 2016 12:09 PM

மார்கழி மாத நட்சத்திர பலன்கள் - அஸ்தம், சித்திரை, ஸ்வாதி

ஹஸ்தம்:



பொது காரியங்களில் விருப்பம் உள்ள ஹஸ்த நக்ஷத்ர அன்பர்களே நீங்கள் திறமைசாலிகளாகவும் இருப்பீர்கள் இந்த மாதம் அறிவு திறன் கூடும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தனாதிபதி சுக்கிரனால் செல்வம் சேரும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும்.



தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் உண்டாகும்.



உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் போதும் அவர்களுக்கு உதவிகள் செய்யும் போதும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.



குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.



பெண்களுக்கு அறிவுத் திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்பார்க்கலாம்.



கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.



அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.



மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.



பரிகாரம்: சனிக்கிழமைகளில் விநாயக பெருமாளை தீபம் ஏற்றி வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். எதிலும் நன்மை உண்டாகும்.



+: எதிர்ப்புகள் அகலும்



-: நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு பணவரத்தி அதிகரிக்கும்



சித்திரை:



எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதில் ஈடுபடும் குணமுடைய சித்திரை நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும். இடமாற்றம் உண்டாகும். சுப செலவுகள் ஏற்படும்.



தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமத போக்கு காணப்படும். செலவும் அதிகரிக்கும் தேவையான பணவசதி கிடைக்கும். விரிவாக்கம் தொடர்பான முயற்சிகள் இழுபறியான நிலையில் இருந்து பின்னர் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்படலாம்.



எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு உண்டாகும். குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்வது நன்மை தரும். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவீர்கள்.



பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். புதிய தொடர்புகளால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இடமாற்றம் ஏற்படலாம்.



கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும்.



அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.



மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.



பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

+: சுபச் செலவுகள் ஏற்படும்



-: சொத்து சம்பந்தமான இழுபறியான நிலை ஏற்படலாம்



ஸ்வாதி:



நீதி, நேர்மை, உண்மை என்று எப்போதும் பாடுபடும் ஸ்வாதி நக்ஷத்ர அன்பர்களே நீங்கள் எதிர்ப்புகளை எளிதில் வெல்லுவீர்கள். இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் அதனால் கவுரவம் உண்டாகும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.



தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். வங்கியில் இருப்பு கூடும். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றி கிடைக்கும். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும்.



குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சி மேற்கொண்டவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். கஷ்டமில்லா சுகவாழ்க்கை இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவும் கிடைக்கும். நெடுநாளைய சங்கடம் தீரும்.



பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து கூடும். எதிர்ப்புகள் விலகும். மன மகிழ்ச்சி உண்டாகும்.



கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை.



அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை.



மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.



பரிகாரம்: குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.



+: கௌரவம் அதிகரிக்கும்



-: திட்டமிட்ட காரியங்களில் தொய்வு ஏற்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x