Published : 08 Jun 2025 06:37 AM
Last Updated : 08 Jun 2025 06:37 AM

​நாகூர் தர்காவில் பக்ரீத் சிறப்பு தொழுகை: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு

நாகூர் சில்லடி தர்கா கடற்கரையில் நேற்று நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை.

நாகப்​பட்​டினம்: பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு நாகூர் தர்​கா​வில் நேற்று நடை​பெற்ற சிறப்​புத் தொழு​கையில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

இறைதூத​ரான நபிகளாரின் தியாகத்தை நினை​வு​கூரும் வகை​யில், முஸ்​லிம்​கள் பக்​ரீத் பண்​டிகையை கொண்​டாடு​கின்​றனர். அதன்​படி, நாகை மாவட்​டம் நாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற தர்​கா​வில் நேற்று பக்​ரீத் பண்​டிகை கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி அங்கு நடை​பெற்ற சிறப்​புத் தொழுகை​யில் ஏராள​மான முஸ்​லிம்​கள் பங்​கேற்​றனர். அப்​போது காசா​வில் அமை​தி​யும், சமா​தான​மும் நிலவ பிரார்த்​தனை செய்​யப்​பட்​டது.

தொழுகைக்​குப் பின், ஒரு​வரையொரு​வர் ஆரத்​தழுவி பக்​ரீத் வாழ்த்​துகளை பகிர்ந்து கொண்​டனர். இதே​போல நாகை மாவட்​டத்​தில் உள்ள 66 பள்ளி வாசல்​களி​லும் பக்​ரீத் சிறப்புத் தொழுகை நடை​பெற்​றது. பின்​னர், ஆடு, மாடு, ஒட்​டகம் போன்​றவற்றை பலி​யிட்​டு, அவற்றை மூன்று சம பங்​கு​களாக பிரித்​து, ஒரு பங்கை உறவினர்​கள், நண்​பர்​களுக்​கும், மற்​றொரு பங்கை ஏழைகளுக்​கும்கொடுத்​து​விட்​டு, 3-வது பங்கை தாங்​கள்​ பயன்​படுத்​திக்​ கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x