மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் பிரம்மோற்சவம்
Updated on
1 min read

ஸ்ரீகாளஹஸ்தி: பஞ்சபூத திருத்தலங்களில் வாயுத் தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறும். அப்போது,பக்தனுக்கு முதல் மரியாதை அளிக்கும் விதமாக, கோயில் அருகே உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில் தான் முதலில் கொடியேற்றம் நடைபெறும்.

இந்நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி சன்னதி முன் உள்ள தங்க கொடிக் கம்பத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ராவண வாகனம், மயூரி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகன சேவைகள் 25-ம் தேதி வரை நடைபெறும். 26-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, நந்தி வாகன சேவை, இரவு லிங்கோத்பவ தரிசனம் நடைபெறும்.

வரும் 27-ம் தேதி தேர்த் திருவிழா, இரவு தெப்போற்சவம், 28-ம் தேதி சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி,மார்ச் மாதம் 1-ம் தேதி சபாபதி திருக்கல்யாணம். 2-ம் தேதி சுவாமி கிரிவலம். 3-ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in