கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

கொரட்டூர் நாகவல்லி அம்மன் கோயில் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
Updated on
1 min read

சென்னை, கொரட்டூர் டிஎன்எச்பி குடியிருப்பு 47-வது தெருவில் ஓம்சக்தி நாகவல்லி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் புற்றும், வேப்பமரமும் மட்டும் அமைந்திருக்க, நாகவல்லியை இங்கு பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபட, நற்காரியங்கள் கைகூட, கோயிலாக உருபெற்று, அம்மன் இங்கு அருள்பாலிக்கிறார்.

வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தரும் நாகவல்லி அம்மனிடம் குழந்தை வரம், திருமண வரம் வேண்டி வந்து, அப்பலன் பெற்றுச் செல்வோர் உண்டு. 1,500 பேர் பால்குடம், 600 பேர் தீ மிதித்தல் என ஆடி மாத இரண்டாவது வார திருவிழா இந்த நாகவல்லி அம்மன் கோயிலில் களை கட்டுகிறது.

ராகு - கேது தோஷம் கொண்டோர், தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான சிறப்பான தலம் இது. இங்குள்ள நாக லிங்கேஸ்வரருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மதுரை முக்குறுணி விநாயகரைப் போல, இங்கும் ஒரு விநாயகர் அருள்பாலிக்கிறார்.

அவருக்கு சங்கடஹர சதுர்த்தி, பைரவருக்கு அஷ்டமி பூஜை மற்றும் கிருத்திகை உள்ளிட்ட பிற பூஜைகளும் இக்கோயிலில் நடைபெறுகின்றன. நடப்பாண்டுக்கான ஆடித் திருவிழா தற்போது தொடங்கி, 28-ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகளுடன் கோலாகலமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஆக.16-ம் தேதி திருவிளக்கு பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in