

மகம்
அமைதியும், கருணையும் கொண்ட மக நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.
+: புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்
-: எதிர்பாராத செலவுகள் உண்டாகும்
பரிகாரம்: வராஹப் பெருமாளை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
பூரம்
அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய பூர நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண் கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
+: தன்னம்பிக்கை அதிகரிக்கும்
-: வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.
உத்திரம்
பார்வையாலேயே மற்றவர்களை பணிய வைக்கும் திறமை உடைய உத்திர நக்ஷத்ர அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும்.
குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.
மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.
+: பாக்கிகள் வசூலாகும்
-: பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.