தோனி பாடிய பாடல்: வைரலான வீடியோ

தோனி பாடிய பாடல்: வைரலான வீடியோ
Updated on
1 min read


ஹிந்தி பாடல் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி பாடுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

உலகக்கோப்பை போட்டிக்குப் பின் இந்திய அணி விளையாடும் எந்தவிதமான தொடரிலும் தோனி பங்கேற்றாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று அவ்வப்போது செய்திகள் ஊடகங்களில் வெளிவாகி வருகின்றன. எனினும் , 2020-ம் ஆண்டு நடக்கும் 13-வது ஐபிஎல் போட்டிக்குப் பிறகு தோனி தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தோனி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளபங்களில் டிரெண்டாகும். அந்த வகையில் தோனி ஹிந்தி பாடல் ஒன்றை பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் ஜாசி கில் என்பவர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷிக்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in