மசாலா பூரி

மசாலா பூரி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

கேரட் - 1

உருளைக் கிழங்கு - 2

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சர்க்கரை - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

கேரட், உருளைக் கிழங்கை இரண்டையும் வேகவைத்துக்கொள்ளுங்கள். உருளைக் கிழங்கைத் தோலுரித்து அதனுடன் சிறிதளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி, பூரி போல் தேய்த்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in