Published : 08 Sep 2016 10:55 am

Updated : 14 Jun 2017 18:59 pm

 

Published : 08 Sep 2016 10:55 AM
Last Updated : 14 Jun 2017 06:59 PM

கேழ்வரகு கொழுக்கட்டை

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு ஒரு கப்

பாசிப் பருப்பு ஒரு கைப்பிடி

தேங்காய்த் துருவல் கால் கப்

நாட்டுச் சர்க்கரை கால் கப்

ஏலக்காய் 2

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வேகவைத்து எடுத்துவையுங்கள். கேழ்வரகு மாவை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவையுங்கள். அதனுடன் வேகவைத்த பாசிப் பருப்பு, தேங்காய்த் துருவல், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சிறிதளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுங்கள்.

கேழ்வரகு கொழுக்கட்டைநவதானிய சுண்டல்வாழைப்பழ அப்பம்பருப்பு வடைதேங்காய் பாயசம்மசாலா மோதகம்

You May Like

More From This Category

More From this Author