

என்னென்ன தேவை?
ரவை - 2 கப்
தேங்காய்ப் பால் - 3 கப் (கெட்டியான பால்)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
நெய் - சிறிதளவு
ரோஸ் எசென்ஸ் - ஒரு துளி
ஏலக்காய்த் தூள் - கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ரவையில் தேங்காய்ப் பாலை ஊற்றி இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள். இந்த மாவை ஐந்து மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு அதனுடன் பேக்கிங் சோடா, ஏலக்காய்த் தூள், எசென்ஸ், சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும்வரை கரண்டியால் கலக்குங்கள். குழியுடன் இருக்கும் மோல்டில் சிறிதளவு நெய் தடவி, அதன் மீது கொஞ்சம் மைதா தூவுங்கள். அதன் மீது சிறிதளவு ரவை கலவையை ஊற்றி அவனில் 200 டிகிரி வெப்ப நிலையில் 20 நிமிடங்கள் வைத்து எடுங்கள்.