

என்னென்ன தேவை?
கோதுமை மாவு - ஒரு கப்
கனிந்த வாழைப்பழம் - 1
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாழைப்பழத்துடன் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். கோதுமை மாவு, உப்பு, சீரகம், பேக்கிங் சோடா இவற்றுடன் அரைத்தப் பழத்தைச் சேர்த்துப் பிசையுங்கள். பிசைந்த மாவைச் சிறிய பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் போட்டு, இருபுறமும் உப்பி பொன்னிறமானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.