

என்னென்ன தேவை?
கருப்பு அல்லது வெள்ளை உளுந்து ஒரு கப்
மைதா மாவு - 3 கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உளுத்தம் பருப்பை ஐந்து மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். கெட்டியாகவும் தளர்வாகவும் இல்லாமல் நடுப்பதத்தில் அரையுங்கள். இதனுடன் மைதா, உப்பு சேர்த்துக் கலக்குங்கள். இதை ஒரு இரவு முழுக்க ஊறவிடுங்கள். மறுநூள் சமையல் சோடா சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.