

என்னென்ன தேவை?
5 ஸ்டார் சாக்லேட் - 4 ரோஸ்டட் சேமியா - 4 ஸ்பூன் நெய் - 3 ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சாக்லேட் துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதில் சேமியாவைக் கலந்து கொள்ளவும். கையில் நெய் தடவிக்கொண்டு நன்கு கலக்கவும். கலவையை அப்படியே நெய் தடவிய தட்டில் பரவலாகப் போட்டு அழுத்திவிடவும். பின் துண்டுகள் போடவும். சேமியா சிக்கி தயார்.
குறிப்பு: நூடுல்ஸிலும் இது போலச் செய்யலாம்.
சீதா சம்பத்