

என்னென்ன தேவை?
வாழைக்காய் – 1
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
மிளகாய்த் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிப்பதற்குக் தேவையான அளவு
பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாழைக்காயைத் தோல்சீவி நறுக்கி வேகவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்த் தூள், வெள்ளை எள் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பிறகு அரைத்து வைத்துள்ள வாழைக்காய் கூழ் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். இதற்குத் தனியாகத் தண்ணீர்விடத் தேவையில்லை. வாணலியில் எண்ணெய் சூடானதும் ரிப்பன் நாடா அச்சைத் தேன்குழல் பிடியில் போட்டு எண்ணெய்யில் பிழிந்து இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் சுவையான வாழைக்காய் ரிப்பன் பக்கோடா தயார்.