சௌசௌ பலகாரம்: குருமா

சௌசௌ பலகாரம்: குருமா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சௌசௌ – 1

வெள்ளை மொச்சை – 1 கப்

மிளகாய் வற்றல் – 5

தேங்காய்த் துருவல் – 1 கப்

பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெங்காயம் – 1

தக்காளி – 2

பூண்டு – 4 பல்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மொச்சையை முதல்நாள் இரவு ஊறவையுங்கள். மறுநாள் குக்கரில் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். சௌசௌவைத் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிளகாய் வற்றல், தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சௌசௌ ஆகியவற்றைப் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் அரைத்துவைத்துள்ள விழுது, வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள். பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கிவையுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in