“எனக்கு ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரொம்ப ஸ்பெஷல்” - விஜய் சேதுபதி

“எனக்கு ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரொம்ப ஸ்பெஷல்” - விஜய் சேதுபதி
Updated on
1 min read

‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் இணைந்து தயாரித்து வெளியாகியுள்ள வெப் சீரிஸ் ‘முத்து என்கிற காட்டான்’. இயக்குநர் மணிகண்டன் மேற்பார்வையில் இந்தத் தொடர் உருவாகியுள்ளது.

மார்ச் 27-ம் தேதி வெளியான இந்த தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனை படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, “இந்த வெப் சீரிஸ் ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கணும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்றுவிட்டது என்ற நிலை வந்தபோதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.

இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த வெப் சீரிஸ் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்கியது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.

இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார். இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். கதை நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. முத்து, மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர், எப்படி நடிப்பார் என நினைத்தேன். ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.

இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு ஹாட்ஸ்டார் நிறுவனம் மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்துக்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி. செட்டில் நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம். இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

“எனக்கு ‘முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ் ரொம்ப ஸ்பெஷல்” - விஜய் சேதுபதி
“உண்மையான காங்கிரஸார் தவெகவில் உள்ளனர்” - நெல்லையில் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in