போலீஸ் துறை​யின் மறுபக்கத்தை பேசும் ‘வாரண்ட்’

போலீஸ் துறை​யின் மறுபக்கத்தை பேசும் ‘வாரண்ட்’
Updated on
1 min read

விலங்கு வெப் தொடர், சூரி நடித்த மாமன் உள்பட சில படங்​களை இயக்​கிய பிர​சாந்த் பாண்​டி​ராஜ், நாயக​னாக நடித்​துள்ள வெப் தொடர், ‘வாரண்ட்’. கிராமப்​புற பின்னணி​யில் உரு​வாகி​யுள்ள இந்த தொடர், காவல் துறை​யின் மறு​பக்​கத்​தை​யும், அதிகாரத்தின் இருண்ட முகத்​தை​யும் மைய​மாகக் கொண்டு உருவாக்கப்பட்​டுள்​ளது.

இதில் பாலாஜி சக்​திவேல், காளி வெங்​கட், அருள்​தாஸ், நம்​ரி​தா, அருள் ​ஜோ​தி, சாயாதே​வி, ஹலோ கந்​த​சாமி, மீனா, கவுசல்யா மற்​றும் வையாபுரி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். சாம் சி.எஸ். பின்​னணி இசை அமைத்​துள்​ளார். அசோக் குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

ஜீ 5 வழங்​கும் இந்த சீரிஸை விக்​னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். சிவன் பிக்​சர்​ஸ், எஸ் ஸ்டூடியோஸ் சார்​பில், பிரசாந்த் பாண்​டிய​ராஜ், பி. விஷால், பி.எம். ஆதீஸ்​வர் இணைந்து தயாரித்​துள்​ளனர். இதன் டிரெய்​லர் அறி​முக விழா, சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் பாண்​டி​ராஜ், சுசீந்​திரன் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் பிர​சாந்த் பாண்​டிய​ராஜ் பேசும்​போது, “’புரூஸ்​லி’ படத்துக்​குப் பிறகு படம் இயக்​காத நேரத்​தில் ‘விலங்​கு’ வெப் தொடரை இயக்​கினேன். அதற்கு கிடைத்த ஆதர​வு​தான் எங்களுக்கு மிகப்​பெரிய அடை​யாளம் தந்​தது. விலங்கு போல இன்​னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்​துள்​ளது. இதில் நடிக​ராக மாறி​யுள்​ளேன்” என்​றார். இந்த வெப் சீரிஸ் மே 22ம் தேதி முதல் ஜீ 5 தளத்​தில் வெளி​யாகிறது.

போலீஸ் துறை​யின் மறுபக்கத்தை பேசும் ‘வாரண்ட்’
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in