‘ரைஸ் அண்ட் ஃபால் 2’-ஐ தொகுத்து வழங்கும் வீரேந்திர சேவாக்

‘ரைஸ் அண்ட் ஃபால் 2’-ஐ தொகுத்து வழங்கும் வீரேந்திர சேவாக்
Updated on
1 min read

‘ரைஸ் அண்ட் ஃபால்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை வீரேந்திர சேவாக் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தனது அடுத்த இன்னிங்ஸுக்கு தயாராகி இருக்கிறார். இந்தமுறை விளையாட்டு வீரராக இல்லை. தொகுப்பாளராக அவர் களம் இறங்குகிறார்.

இதுகுறித்து அமேசான் பிரைம் வீடியோ முதல் கிளிம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், மேலே சென்ற எதுவும் கீழே வந்தே ஆக வேண்டும் என்ற இயற்கையின் விதியை தன் பாணியில் விளக்குகிறார். 

‘ரைஸ் அண்ட் ஃபால்’-ன் இந்த இரண்டாவது சீசன் ஆள்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என இரண்டு  பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 15 பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.

ஆள்பவர்கள் மேல்தளத்தில் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் போது, தொழிலாளர்கள் அடித்தளத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பர். விளையாட்டு தொடரும் போது போட்டியாளர்கள் அவர்கள் இருக்கும் இடம், அமைக்கும் கூட்டணி, திறமை, கையாளும் யுக்தி ஆகியவற்றின் அடிப்படையில், மேல்தளம், அடித்தளம் ஆகிய இடங்களுக்கு மாறுவர்.

விளையாட்டு மைதானத்தில் பல ஆண்டுகள் பந்து வீச்சாளர்கள், எதிரணியினர், விளையாட்டு சூழல்நிலைகளைக் கணித்து வந்த சேவாக், இந்த முறை போட்டியாளர்களின் துரோகங்கள், கூட்டணிகள், பழிவாங்குதல் போன்றவற்றை நேரில் காண இருக்கிறார். விளையாட்டு வீரர் தொகுப்பாளராக மாறியிருப்பது இந்த நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்டியுள்ளது.

விரைவில் வெளியாக உள்ள ‘ரைஸ் அண்ட் ஃபால்’ நிகழ்ச்சியின் புதிய சீசன், பிரைம் வீடியோ ஓடிடி தளத்திலும், எம்எக்ஸ் பிளேயர் ஆண்ட்ராய்டு செயலியிலும் இலவசமாக காணக் கிடைக்க இருக்கிறது.

‘ரைஸ் அண்ட் ஃபால் 2’-ஐ தொகுத்து வழங்கும் வீரேந்திர சேவாக்
விஷாலின் ‘மகுடம்’ செப்.11-ல் ஓடிடியில் ரிலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in