

நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகமாகிய ‘மகுடம்’ படம் செப்டம்பர் 11-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
விஷால் முதன்முறையாக இயக்கியும், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. மூன்று வேடங்களில் அவர் நடித்திருக்கும் இந்தப் படத்தில், துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
முதலில் ரவி அரசு இயக்குவதாக இருந்த ‘மகுடம்’ படம், இயக்குநருக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் விஷாலே படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. விஷாலின் இயக்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தப் படம் செப்டம்பர் 11-ம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பார்க்கலாம்.