விமல், நட்டி நடித்த ‘வடம்’ ஓடிடியில் வெளியீடு

விமல், நட்டி நடித்த ‘வடம்’ ஓடிடியில் வெளியீடு
Updated on
1 min read

விமல் நடிகத்துள்ள ‘வடம்’ படத்தை வி.கேந்​திரன் இயக்​கி​யுள்​ளார். மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர் தயாரித்துள்ள இதில் நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்​து ​மதி மணி​கண்​டன்​, ஷரவண சக்​தி, மூர்த்தி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

மஞ்சு விரட்​டுப் பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்கு டி.இமான் இசையமைத்​துள்​ளார். பிரசன்னா எஸ்​. கு​மார் ஒளிப்பதிவு செய்​துள்​ளார். இப்படம் கடந்த மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

இந்த நிலையில் இப்படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இது குறித்து நடிகர் விமல் கூறுகையில், “இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது. அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது" என்று தெரிவித்தார்.

இயக்குனர் கேந்திரன் கூறுகையில், “வடம் உருவானதன் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்வு பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை” என்று தெரிவித்தார்.

விமல், நட்டி நடித்த ‘வடம்’ ஓடிடியில் வெளியீடு
வடம்: திரைப் பார்வை - மாடுகளின் சீற்றமும், மனிதர்களின் மறைமுக ஆட்டமும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in