

சூரியின் ‘மண்டாடி’ முதல் மலையாள த்ரில்லர் ‘பிடிகே’ வரை இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் தொடர்களின் பட்டியல் இது.
மண்டாடி: சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளி வந்த படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடற்கரையோரத்து மக்களின் வீரத்தையும், விளையாட்டைபற்றியும் பேசும் இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சனம், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் அக்டோபர் 8-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்: ஆதித்ய ஹாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘எபிக் - ஃபர்ஸ்ட் செமஸ்டர்’. இந்தப் படத்தில் ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி சைதன்யா, சிவாஜி, வாசுகி, கல்யாண் சங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ரொமாண்டிக் காமெடி தெலுங்கு திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தி வெளியாகிறது.
லீஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்: பாபு தேகலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் ‘லீஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்’. இதில் ஹர்ஷா செமுடு, ஹைபர் ஆதி, ஐஸ்வர்யா ஹோலக்கல், ஜீவன் குமார், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு நகைச்சுவை தொடர் அக்டோபர் 9-ம் தேதி ஈடிவி வின், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
பாரிஸ் கஃபே: சரஜ் சீலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘பாரிஸ் கஃபே’. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஸ்வா, நயனா சாய், சாய் விக்கி, பிபின் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் தமிழ் படம் அக்டோபர் 9-ம் தேதி பிரைம் வீடியோ, ஆஹா வீடியோ, சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
ஐஸ் (Eyes): மனு அசோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் ‘ஐஸ்’ . கனி கஸ்தூரி, ஷ்ருதி ராமசந்ரன், நிகிலா விமல், சனியா ஐயப்பன், தேவ் மோஹன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த சைக்கலாஜிகல் த்ரில்லர் மலையாள வெப் தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது.
பிரதம திருஷ்டிய குட்டக்கார் (பிடிகே): ஷஹத் நிலம்பூர் இயக்கத்தில் உருவான படம் ‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’. இந்தப் படத்தில், பார்வதி திருவோத்து, விஜயராகவன், மேத்யூ தாம்ஸ், சித்தார்த் பரதன், உன்னிமய பிரசாத், அஷீஸ் நெடுமங்காடு, வினய் ஃபோர்ட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த மலையாள த்ரில்லர் படம் அக்டோபர் 9-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கலிஃபா: தி ரூலர்: வைசாக் இயக்கத்தில் உருவான மலையாள படம் ‘கலிஃபா: தி ரூலர்’. இந்தப் படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், நீல் நிதின் முகேஷ், மளவிகா சர்மா, ஷம்மி திலகன், ,இந்திரன்ஸ், ரெஞ்சி பணிக்கர், மோஹினி, ஷ்வாஜித் உள்ளிட்டோருடன், மோகன்லால், டோவினோ தாமஸ், சவுபின் ஷஹிர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் பிரைம் வீடியோ, சிம்ப்ளி சவுத், மனோரமாமேக்ஸ், ஆஹா ஓடிடி தளங்களில் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் 2 சூப்பர் ஷோ: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் நடிகர்கள், படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியான ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ அக்டோபர் 9-ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.