‘சட்டமும் நீதியும் 2’ வெப் சீரிஸ் அக்.23-ல் ரிலீஸ்

‘சட்டமும் நீதியும் 2’ வெப் சீரிஸ் அக்.23-ல் ரிலீஸ்
Updated on: 
1 min read

சரவணன் முதன்மை கதாபாத்தித்தில் நடித்திருக்கும் 'சட்டமும் நீதியும்' வெப் தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23-ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இதுகுறித்த அறிவிப்பை ஜீ 5 தமிழ் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘நீதிக்கான போராட்டம் முன் எப்போதையும் விட பெரிதாக திரும்புகிறது. 'சட்டமும் நீதியும் 2' அக்டோபர் 23 முதல் ஒளிபரப்பாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் சரவணனும், வரலட்சுமி சரத்குமார் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் இந்த வெப் தொடரை பாலாஜி செல்வராஜ் இயக்கி உள்ளார். 18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ளார். 

முன்னதாக, கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடர் முதல் சீசன் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்தத் தொடரில் நம்ரிதா எம்.வி.நாயகியாக  நடித்திருந்தார்.

நீதி கிடைக்கும் என நம்பி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து, தீக்குளித்து மாண்டு போகிறார் ஓர் ஏழைத் தந்தை. அடையாளமற்றவர் என்று காரணம் காட்டி, இறந்தவரைப் பற்றிய எந்த விசாரணையும் செய்யாமல் காவல் துறையே அவரது எரிந்த உடலை எரியூட்டிவிடுகிறது. இதை ஒரு பொதுநல வழக்காக்குகிறார் ‘நோட்டரி பப்ளிக்’ வழக்கறிஞரான சுந்தரமூர்த்தி.

அவரால் குப்புசாமியின் வாழ்க்கைப் பக்கங்களில் புதைக்கப்பட்ட அநீதியை அடையாளம் கண்டு, அதை வெளிக்கொண்டு வர முடிந்ததா? அவருக்கு கிடைக்க வேண்டிய நீதியைப் பெற்றுத் தர முடிந்ததா என்பது தான் ஜீ 5 தளத்தின் அசல் உள்ளடக்கங்களின் வரிசையில் வெளியான ‘சட்டமும் நீதியும்’ வெப் தொடரின் கதை.

‘சட்டமும் நீதியும் 2’ வெப் சீரிஸ் அக்.23-ல் ரிலீஸ்
‘பிரதம திருஷ்டிய குட்டக்கார்’ அக்.9-ல் ஓடிடியில் ரிலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in