45 நாட்​களில் உரு​வான பிரம்மாண்ட ‘பிக்பாஸ்’ அரங்கு

45 நாட்​களில் உரு​வான பிரம்மாண்ட ‘பிக்பாஸ்’ அரங்கு
Updated on
1 min read

சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளில் பிரபல​மான ‘பிக்​பாஸ்’ நிகழ்ச்சியின் 10- வது சீசன், நாளை (செப்.6) மாலை 6 மணி முதல் தொடங்க உள்​ளது. இத்​தொடர் ஜியோ ஹாட்​ஸ்​டார் ஓடிடி தளத்திலும், ஸ்டார் விஜய் தொலைக்​காட்​சி​யிலும் ஒரே நேரத்​தில் நேரலை​யாக ஒளிபரப்​பாகிறது. பிக்​பாஸ் வீட்​டில் நடக்​கும் அனைத்து சுவாரஸ்ய நிகழ்ச்​சிகளை​யும் 24 மணி நேர​மும் ஜியோ ஹாட்​ஸ்​டார் தளத்​தில் நேரடி​யாகப் பார்க்​கும் வசதி​யும் செய்யப்பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்த பிக்​பாஸ் வீடு பூந்​தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்​றில் பிரம்​மாண்​ட​மாக அமைக்கப்பட்டுள்​ளது. 45 நாட்​கள் உழைப்​பில் இந்த அரங்கை வடிவ​மைத்​துள்​ளனர். இது 10-வது சீசன் என்​ப​தால் அதைக் குறிக்கும் வகை​யில் 10 என்ற எண்ணை வெளிப்​படை​யாகக் காட்டா​மல், கட்​டிட வடிவ​மைப்​பிலேயே உணர்த்​தும் வகை​யில் உரு​வாக்​கி​யுள்​ளனர்.

“இங்கு 54-க்​கும் மேற்​பட்ட கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்ளன. இந்த சீசனில் பொது​மக்​களில் இருந்து தேர்ந்தெடுக்​கப்​பட்​ட போட்​டி​யாளர்​களும் (காமன் மேன்) பங்​கேற்​ப​தால், அதைக் குறிக்​கும் வகை​யில் புடைப்​புச் சிற்​பம் ஒன்​றும் இடம்​பெற்​றுள்​ளது.

பிக்பாஸ் வீட்​டுக்​குள் ஒன்​றிணை​யும் பல்​வேறு பட்ட ஆளுமை​களைப் பிர​திபலிக்​கும் வகை​யில், இந்த இல்​லம் மாறு​பட்ட ஆற்​றல்​களின் கலவை​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. பிக்பாஸ் அனுபவத்​தில் எப்​போதும் முக்​கிய​மான இடமாகத் திகழும் சமையலறை, இந்த சீசனில் புதிய அடை​யாளத்​தைப் பெற்​றுள்​ளது” என பிக்​பாஸ் குழு தெரி​வித்​துள்​ளது.

45 நாட்​களில் உரு​வான பிரம்மாண்ட ‘பிக்பாஸ்’ அரங்கு
‘டோரதி’ பார்த்துவிட்டு இளையராஜா சொன்ன யோசனை: கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சிப் பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in