‘தடயம்’ ட்ரெய்லர் எப்படி? - சமுத்திரக்கனியின் க்ரைம் த்ரில்லர்!

‘தடயம்’ ட்ரெய்லர் எப்படி? - சமுத்திரக்கனியின் க்ரைம் த்ரில்லர்!
Updated on
1 min read

சமுத்திரக்கனி நடிக்கும் வெப் தொடருக்கு ‘தடயம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நவீன் குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக சொல்லப்படும் இத்தொடரில் சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக வருகிறார். ட்ரெய்லரின் தொடக்கமே உள் இழுத்துக் கொள்கிறது. சமுத்திரக்கனியின் உயர் அதிகாரியாக ஷிவதா நடித்திருக்கிறார்.

தொடர் கொலைகளைப் பற்றி துப்பறியும் களம் என்பதை ட்ரெய்லரின் மூலம் யூகிக்க முடிகிறது. க்ரைம் த்ரில்லர்களுக்கே உரிய டார்க் ஆன ஒளிப்பதிவு, இதயத்துடிப்பை எகிற வைக்கும் இசை இதிலும் இடம்பெற்றுள்ளது. சரியான திரைக்கதையும் அமைந்துவிட்டால் தமிழின் முக்கிய வெப் தொடர்களில் ஒன்றாக மாறும். ‘தடயம்’ ட்ரெய்லர் வீடியோ: 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in