

சமுத்திரக்கனி நடித்துள்ள வெப் தொடர் ‘தடயம்’. நவீன் குமார் பழனிவேல் இயக்கிய இந்த வெப் தொடரை, அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். சில உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ஜீ 5 ஓடிடி தளத்துக்காக இந்த தொடர் உருவாகிஉள்ளது.
“எல்லையோர கிராமங்களில் நடு இரவில் நிகழ்ந்த தொடர் கொலைகள், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பயத்தையும், பதிலற்ற கேள்விகளையும், மர்மத்தையும் உருவாக்கின. பணம், நகை, கொள்ளை போகவில்லை என்றாலும் ஒவ்வொரு வீட்டிலும் கணவரின் அரைஞாண் கயிறும், மனைவியின் தாலியும் மட்டும் திருடப்பட்டிருந்தன. அதன் பின்னணியில் இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது” என்றது படக்குழு.
சமுத்திரக்கனி போலீஸ் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார். ஷிவதா இன்ஸ்பெக்டராக தோன்றுகிறார். 1990-களின் இறுதியில் கிராமப்புற பின்னணியில் இந்த தொடர் அமைந்துள்ளது. இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜீ 5 தளத்தில் பிப்.27-ம் தேதி வெளியாகிறது.