

‘எருமை சாணி’ விஜய்குமார் ராஜேந்திரன் நாயகனாக நடித்துள்ள வெப் தொடர் ‘ரிசார்ட்’. பிரவீன் பென்னட் இயக்கியுள்ள இத்தொடரில், கோபக்கார தலைமை சமையல்காரராகவும், கதையின் முக்கிய வில்லனாகவும் ‘தலைவாசல்’ விஜய் நடித்துள்ளார்.
இவர்களுடன் கீர்த்தி அமர், சுனிதா, அபிநயா நேத்ரன், தர்ஷனா பால், சாய் தன்யா, படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். “கற்பனையான சொகுசு விடுதியில் இக்கதை நகர்கிறது. முறையான கல்வி கற்காத, சமையல் கலையில் அபார திறமை கொண்ட ஹவுஸ்கீப்பிங் ஊழியர் வெற்றி, தலைசிறந்த ‘செஃப்’ ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார்.
ஒருபுறம் அவரது லட்சியம், மறுபுறம் பணியிடத்தில் இருக்கும் அதிகார ஒடுக்குமுறை என இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் மோதலே இந்த வெப் தொடரின் மையக்கரு. இந்த வெப் தொடர் மார்ச் 13 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 எபிசோடுகளாக வெளியாகும் வகையில், இதை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளனர்.