இடைத்​தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆவணப்​ படத்துக்கு எதிராக நோட்டீஸ்

இடைத்​தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆவணப்​ படத்துக்கு எதிராக நோட்டீஸ்
Updated on: 
1 min read

இடைத்​தரகர் சுகேஷ் சந்​திரசேகர் பற்றி உரு​வாகி​யுள்ள ஆவணப் படத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

பெங்​களூரு​வைச் சேர்ந்​தவர் சுகேஷ் சந்​திரசேகர். இடைத்தரகரான இவர், அரசி​யல் தலை​வர்​கள் மற்​றும் ஆட்சியாளர்​களு​டன் நட்பு இருப்​ப​தாகக் கூறி தொழிலதிபர்​கள், அரசி​யல் பிரபலங்​கள் உள்​பட பலரை ஏமாற்றி பணமோசடி செய்த​தாகப் புகார்​கள் எழுந்​தன.

தேர்​தல் ஆணை​யத்​துக்கு ரூ.50 கோடி லஞ்​சம் கொடுக்க முயன்ற வழக்​கு உள்​பட சில வழக்​கு​களில் கைது செய்​யப்​பட்ட அவர், சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு இருந்​தவாறே, தொழிலதிபர் ஷிவிந்​தர் சிங்​கின் மனைவி அதிதி சிங்கை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்​தது தொடர்​பாக சுகேஷ் சந்திரசேகர் மீது டெல்லி பொருளாதா​ரக் குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

நடிகைகள் ஜாக்​குலின் பெர்​னாண்​டஸ், நோரா பதேஹி ஆகியோருடனும் சுகேஷ் சந்​திரசேகர் தொடர்​பில் இருந்​துள்​ளார். சுகேஷின் மனைவி லீனா மரியா பால் மீதும் வழக்​கு​கள் உள்​ளன. இந்​நிலை​யில் சுகேஷ் சந்​திரசேகரைப் பற்​றிய ஆவணப்​படம், ‘லவ், ஸ்​கேம் அவுர் தோகா: த சுகேஷ் சந்​திரசேகர் ஸ்டோரி’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. மவுமிதா சென் மற்​றும் நியந்தா சேகர் இயக்​கி​யுள்ள இந்த ஆவணப்​படம் டிச. 18-ல் நெட்ஃபிளிக்​ஸில் வெளியாகிறது.

பெங்​களூரு​வில் தொடங்​கிய சுகேஷ் சந்​திரசேகரின் ஆரம்​ப கால வாழ்க்கை, பல போலி அடை​யாளங்​கள், சுமார் ரூ.200 கோடி மோசடி மற்​றும் மிரட்​டல் குற்​றச்​சாட்​டுகள், அரசி​யல்​வாதி​கள் மற்றும் பாலிவுட் பிரபலங்​களு​டனான தொடர்​பு​கள் ஆகியவை குறித்து 2 ஆண்​டுகளுக்​கும் மேலாக ஆய்வு செய்து இந்தப்படத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர்.

நெட்ஃபிளிக்சுக்கு நோட்​டீஸ்: இதற்​கிடையே சுகேஷ் சந்திரசேகரின் வழக்​கறிஞர், நெட்ஃபிளிக்ஸ் மற்​றும் படத்தை தயாரித்​துள்ள இந்​தியா டுடே குழு​மத்​துக்​கு நோட்​டீஸ் அனுப்பியுள்​ளார்.

அதில் ஆவணப்​படத்​தின் டிச.18-ம் தேதி வெளியீட்டை ஒத்​திவைக்​கக் கோரியும் தனது கட்​சிக்​காரருக்கு எதிரான குற்​றவியல் வழக்​கு​கள் நடந்து கொண்​டிருக்​கும்​ போது இந்த ஆவணப்​படத்தை வெளி​யிடுவது, நியாய​மான விசாரணைக்​கான அவரது உரிமையைப் பாதிக்​கும் என்​றும் கூறியுள்​ளார்.

இடைத்​தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆவணப்​ படத்துக்கு எதிராக நோட்டீஸ்
“டாம் ஹாங்க்ஸ் பாராட்டியது பெரிய விஷயம்” - விஜய் சேதுபதி மகிழ்ச்சி

X