முதல் காதல் நினைவுகளை பேசும் ‘நோட்​புக் 90ஸ் - காதல் பிளாஷ்பேக்’

நடிகை பாவனா

நடிகை பாவனா

Updated on: 
1 min read

முதல் காதலின் இனிமையை மீண்​டும் நினைவுபடுத்​தும் வகையில் உரு​வாகி​யுள்ள வெப் தொடர் ‘நோட்​புக் 90ஸ்- காதல் பிளாஷ்​பேக்’. இதை சதாசிவம் இயக்​கி​யுள்​ளார். நீலன் எழுதியுள்ளார். இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹரின் ஸ்ட்​ரீட்​டைல்ட் பிக்​சர்ஸ் தயாரித்​துள்ள இத்​தொடரில் பாவனா, முஸாம்​மில் இலியாஸ், யுவா ஆகியோர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். நவ.23-ம் தேதி சோனி விழா மற்​றும் சோனி லிவ் தளத்​தில் இத்​தொடர் ஒளிபரப்​பாகிறது.

திருச்​சி​யைப் பின்​னணி​யாகக் கொண்ட இத் தொடரில், பள்​ளிப் பரு​வத்​தில் நடக்​கும் விளை​யாட்​டுத்​தனமான குறும்​பில் தொடங்கும் நட்பு, எதிர்​பாராதவித​மாக முதல் காதலாக மாறுகிறது. முதல் காதல் தரும் மகிழ்ச்சி மனதில் இருப்​ப​தைச் சொல்​லத் தயங்​கும் தருணம், தங்​கள் காதலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற நம்​பிக்கை. புரிதல் இல்​லாத தருணங்​கள், வலிக்​கும் பிரிவு​கள் என இளமைப் பரு​வக் காதலின் பல உணர்​வு​களை இந்​தத் தொடர் அழகாக எடுத்​துக்​காட்​டும்​ என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து இயக்​குநர் மித்​ரன் ஆர்.ஜவஹர் கூறும்​போது, “இத்​தொடர் மூலம் நம் மனதுக்கு நெருக்​க​மான ஒரு காலத்தை மீண்டும் நினைவு​கூர விரும்​பினேன். 90-களில் நட்பு, குடும்​பம் மற்றும் உறவு​களுக்கு தனி அழகு இருந்​தது. அந்​தக் காலத்​தின் நினைவு​களை மீண்​டும் கொண்டு வரு​வதுடன் அப்​போது நம் வாழ்க்​கையை அழகாக்​கிய தருணங்​களை​யும் இந்​தத் தொடர் நினைவுபடுத்​தும் என்று நம்​பு​கிறேன். இந்​தத் தொடரைப் பார்க்கும் ஒரு​வர், தனது பழைய நண்பரை நினைத்​துப் பார்த்தாலோ பழைய நினைவு​களைப் புன்​னகையுடன் நினைவு கூர்ந்​தாலோ அதுவே எனக்கு மகிழ்ச்சி” என்​றார்.

<div class="paragraphs"><p>நடிகை பாவனா</p></div>
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட காரணம் என்ன?

X