

2026-ம் ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ள தமிழ்ப் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தாங்கள் 2026-ம் ஆண்டு வெளியீட்டுக்காக கைப்பற்றியுள்ள தமிழ்ப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் நடிப்பில் 2 படங்கள் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
சூர்யா – வெங்கி அட்லுரி இணையும் படம், சூர்யா – ஜீத்து மாதவன் இணையும் படம், தனுஷ் – விக்னேஷ் ராஜா இணையும் ‘கரா’, தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம், கார்த்தி நடித்து வரும் ‘மார்ஷல்’, அபிஷன் ஜீவந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’, வி.ஜே.சித்து இயக்கி வரும் ‘டயங்கரம்’, ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம், ரவி மோகன் தயாரித்து வரும் ‘ப்ரோ கோட்’, அதர்வா நடித்து வரும் ‘இதயம் முரளி’, விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘கட்டா குஸ்தி 2’, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அர்ஜுன் நடித்து வரும் படம் ஆகிய படங்களின் ஓடிடி உரிமையினை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இது தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் கன்டென்ட் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், “வலுவான, உணர்வு்பூர்வமான, அசல் கதைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் இந்தியாவிலும் உலகளவிலும் பார்வையிடப்பட்டு, விவாதிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருவதை நாங்கள் கண்டுள்ளோம். பொங்கலை முன்னிட்டு தொடர்ந்து நான்காவது ஆண்டாக எங்களின் தமிழ் உரிமம் பெற்ற திரைப்பட பட்டியலை அறிவிப்பதில் பெருமை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.