‘முத்து என்கிற காட்டான்’ டீசர் எப்படி? - விஜய் சேதுபதியும் உடல் இல்லா தலையும்!

‘முத்து என்கிற காட்டான்’ டீசர் எப்படி? - விஜய் சேதுபதியும் உடல் இல்லா தலையும்!
Updated on
1 min read

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ வெப் தொடரின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' போன்ற படங்களுக்குப் பிறகு மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இத்தொடர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டீசர் எப்படி? - டீசரில், விஜய் சேதுபதி தனது வழக்கமான பாணியில் நையாண்டி கலந்த நகைச்சுவையுடன் பின்னணியில் பேசுகிறார். காணாமல் போன தனது உடலைத் தேடித் தருமாறு மக்களிடம் அவருடைய தலை கோரிக்கை வைப்பது போன்ற காட்சிகள் ஆவலை தூண்டுகின்றன. இந்தத் தொடர் நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் கலந்த கதையாக இருக்கும் என்பதை டீசர் உறுதிப்படுத்துகிறது.

இத்தொடர் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மணிகண்டன் - விஜய் சேதுபதி கூட்டணியின் முந்தைய படங்கள் விமர்சன ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றவை என்பதால், ஓடிடி தளத்திலும் இத்தொடர் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘முத்து என்கிற காட்டான்’ டீசர் எப்படி? - விஜய் சேதுபதியும் உடல் இல்லா தலையும்!
தாய் கிழவி: விமர்சனம் - ராதிகா அசத்தும் கலகல என்டர்டெய்னர்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in