ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ நவ.6-ல் ஓடிடியில் ரிலீஸ்

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ நவ.6-ல் ஓடிடியில் ரிலீஸ்
Updated on: 
1 min read

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த ‘மீசைய முறுக்கு 2’ படம், தீபாவளி வாரத்தில் நவம்பர் 6-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி, இயக்​கி, கதா​நாயக​னாக நடித்​திருக்கும் ​படம், ‘மீசைய முறுக்கு 2’. இதில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர். இவர்களுடன் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

“மீசைய முறுக்கு என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பயோபிக். ஆனால், ‘மீசைய முறுக்கு 2’ இசை, இசைக் கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கையைப் பற்றிய உலகளாவிய கதை. இசையைத் தங்களது வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் கனவுகள், போராட்டங்கள், பயணங்கள் மற்றும் உணர்வுகளை இப்படம் பேசுகிறது” என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தை அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா சார்​பில் குஷ்பு சுந்​தர், ஏ.சி.எஸ். அருண்​கு​மார் தயாரித்​துள்ளனர். செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின்​ ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி சோனி லைவ் தமிழ் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இந்தத் தகவலை சோனி லிவ் தமிழ் அதன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘உற்சாகம் நிறைந்த தீபாவளிக்கு தயாராகுங்கள். ‘மீசைய முறுக்கு 2’ படம் நவம்பர் 6-ம் தேதி முதல் சோனி லிவ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ நவ.6-ல் ஓடிடியில் ரிலீஸ்
‘ஜெயிலர் 2’ ராடி தீம் இசையை பகிர்ந்த ஹ்ரித்திக் ரோஷன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in