

சென்னை: வெப் சீரிஸ் ஒன்றின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்.
‘விலங்கு’ என்ற வெப் சீரிஸின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் பிரசாந்த் பாண்டிராஜ். அடுத்ததாக சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்தை இயக்கியிருந்தார். ‘விலங்கு’ வெப் சீரிஸுக்கு பின்பு நடிகர்கள் பலரும் அவருடைய இயக்கத்தில் நடிக்க அணுகி வந்தனர்.
தற்போது அடுத்ததாக வெப் சீரிஸ் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதனை இயக்குநர் பாண்டிராஜிடம் பணிபுரிந்த விக்னேஷ் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக நடித்து வருகிறார் பிரசாந்த் பாண்டிராஜ். இதுவும் ‘விலங்கு’ பாணியிலான க்ரைம் த்ரில்லர் கதையாகும். ஜீ5 நிறுவனம் வழங்க ‘விலங்கு’ குழுவினரே உருவாக்குகிறார்கள்.
இதில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி, அவருடைய மேற்பார்வையில்தான் இந்த வெப் சீரிஸ் உருவாவது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸை முடித்துவிட்டு, முன்னணி நாயகர் ஒருவரை வைத்து படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பிரசாந்த் பாண்டிராஜ்.