பிரைம் வீடியோ​வில் ‘லோக்கல் டைம்ஸ்’

பிரைம் வீடியோ​வில் ‘லோக்கல் டைம்ஸ்’
Updated on
1 min read

ரிஷிகாந்த், அப்​துல் லீ, மவுரிஷ் தாஸ், அத்​விதா ஆறு​முகம், ஆர்​.​பாண்​டிய​ராஜன், சின்னி ஜெயந்த், ரினி, நந்​திதா குமார் உள்பட பலர் நடித்​துள்ள வெப் தொடர், ‘லோக்கல் டைம்ஸ்’. 7 எபிசோடு​களை கொண்ட தமிழ் காமெடி-டிராமா தொட​ரான இதை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்.

அவர் கூறும்​போது, “தங்​கள் கனவு​களைத் துரத்​திக்​கொண்டு நிற்​கும் யாருடைய கதை​யாக​வும் இது இருக்​கலாம். நமது கதா​நாயகர்​கள் வழக்​க​மான ஹீரோக்​கள் அல்ல, அவர்​கள் குறை​களு​டன் இருப்​பவர்​கள், பிடி​வாதம் கொண்​ட​வர்​கள், சில நேரங்​களில் முட்​டாள்​களாக​வும் இருக்​கலாம். ஆனால் அவர்​கள் ஆழமான அன்பை கொண்​ட​வர்​கள்.

அவர்​கள் ஒரு​வரை ஒரு​வர் விட்​டுக்​கொடுக்​காமல் இருப்​பது உணர்​வுப்​பூர்​வ​மாக இருக்​கும்” என்​றார். பிர​வீன் முத்​துரங்​கன் எழு​திய இந்த வெப் தொடரை அபிநவ் கஸ்​தூ​ரா, சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்​றும் விஷ்வக் சென் பி. இணைந்து உரு​வாக்​கி​யுள்​ளனர். பிரைம் வீடியோ​வில் மார்ச் 13-ல் வெளி​யாகும் இதை ஃபேன்​பாய் புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஜித்​தின் துரை தயாரித்​துள்​ளார்.

பிரைம் வீடியோ​வில் ‘லோக்கல் டைம்ஸ்’
தலைநகரில் களமிறங்கும் விசிக: விஜய்க்கு எதிராக ஷா நவாஸை நிறுத்தவும் பரிசீலனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in