ஆக.7-ல் ஓடிடியில் ‘இதயம் முரளி’ வெளியீடு

ஆக.7-ல் ஓடிடியில் ‘இதயம் முரளி’ வெளியீடு
Updated on
1 min read

ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘இதயம் முரளி’ வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘இதயம் முரளி’. தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜூலை 10-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘இதயம் முரளி’ வெளியாவது உறுதியாகி இருக்கிறது. அதன் ஓடிடி தளத்தில் வெள்ளிக்கிழமை முதல் என்று அப்படத்தின் விளம்பரம் இடம்பெற்றிருக்கிறது. ஓடிடி தளத்திற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் அதர்வா, தமன், ஃபகத் பாசில், ப்ரீத்தி முகுந்தன், ரக்‌ஷன், மாளவிகா மோகனன், ஏஞ்சலின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். ‘இதயம் முரளி’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கவுள்ள படத்தினை தயாரிக்கவுள்ளது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.

ஆக.7-ல் ஓடிடியில் ‘இதயம் முரளி’ வெளியீடு
ஆக.28-ல் வெளியாகிறது ‘ஒன்ஸ் மோர்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in