

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பே டயானா’. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பணிகள் முன்பே முடிக்கப்பட்டாலும், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் படம் தற்போது தான் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க காதல் உணர்வுகள் கொண்ட படமாக இது உருவாகியுள்ளது. இதன் இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், கலை இயக்குநராக ராஜ் கமல் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முன்னதாகவே இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டுடன் படத்தின் விளம்ரப்படுத்தும் பணிகளைத் தொடங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.