‘சிட்​டாடல் 2’ சஸ்​பென்ஸை பகிர வேண்​டாம்: பிரி​யங்கா சோப்ரா வேண்டுகோள்

‘சிட்​டாடல் 2’ சஸ்​பென்ஸை பகிர வேண்​டாம்: பிரி​யங்கா சோப்ரா வேண்டுகோள்
Updated on
1 min read

பிரி​யங்கா சோப்​ரா, ரிச்​சர்ட் மேடன், ஸ்டான்லி டுச்சி உள்பட பலர் நடித்து 2023-ம் ஆண்டு வெளி​யான வெப் தொடர், ‘சிட்​டாடல்’. ஸ்பை த்ரில்​லர் வெப்​தொட​ரான இதை நீயூட்​டன் தாமஸ், ஜெஸிக்கா யு ஆகியோர் இயக்​கி​யிருந்​தனர்.

இத்​தொடர் வெற்றி பெற்​றதை அடுத்து இதன் அடுத்த சீசன் இப்​போது உரு​வாகி​யுள்​ளது. பிரபல ஹாலிவுட் இயக்​குநர்​களான ரூஸோ சகோ​தரர்கள் இதைத் தயாரித்​துள்​ளனர். 7 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் அமே​சான் பிரைம் வீடியோ​வில் நேற்று வெளி​யானது. இதில் பிரி​யங்கா சோப்​ரா, ரிச்சர்ட் மேடன் முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இத்​தொடரின் கதையை​யும் முக்​கிய திருப்பங்களை​யும் இணை​யதளங்​களில் பகிர வேண்​டாம் என்று அந்​தத் தொடரின் தயாரிப்​பாளர்​களான ரூசோ சகோ​தரர்கள் மற்றும் பிரி​யங்கா சோப்ரா ஆகியோர் சமூக வலை​தளம் மூலம் கேட்​டுக் கொண்​டுள்​ளனர்.

“இந்​தத் தொடருக்​காக மிக​வும் கடின​மாக உழைத்​திருக்​கிறோம். கதை​யின் சஸ்​பென்ஸ் திரை​யில் வெளிப்​படும்​போது​தான் சுவாரஸி​யம் குறை​யாமல் இருக்​கும். தயவுசெய்து அது எதை​யும் வெளியே கசி​ய​ வி​டாதீர்​கள்” என்று சமூக வலை​தளத்​தில் பதிவிட்டுள்​ளனர்.

இதற்​கிடையே, ‘சிட்​டாடல் 2’ பற்​றிய பேச்​சுக்​கள் இருந்​தா​லும் மார்​வெல் ரசிகர்​கள் ரூசோ சகோ​தரர்க​ளின் ‘அவெஞ்​சர்​ஸ்: டூம்​ஸ்​டே’ படத்​தின் ட்ரெய்​லர் அல்​லது அப்​டேட் எப்​போது வரும் என்று சமூக வலை​ தளங்​களில் கேட்டு வரு​கின்​றனர்.

‘சிட்​டாடல் 2’ சஸ்​பென்ஸை பகிர வேண்​டாம்: பிரி​யங்கா சோப்ரா வேண்டுகோள்
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? - கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in