“கொரிய - தமிழ் கலாச்சாரங்களில் வரலாற்று ஒற்​றுமை​கள்” - ‘மேட் இன் கொரியா’ இயக்குநர் தகவல்

“கொரிய - தமிழ் கலாச்சாரங்களில் வரலாற்று ஒற்​றுமை​கள்” - ‘மேட் இன் கொரியா’ இயக்குநர் தகவல்
Updated on
1 min read

பிரி​யங்கா மோகன் நாயகி​யாக நடித்​துள்ள படம், ‘மேட் இன் கொரியா’. ரா.​கார்த்​திக் இயக்​கி​யுள்ள இதை ரைஸ் ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் நிதி சாகர் தயாரித்துள்​ளார். நெட்ஃபிளிக்ஸ் தளத்​தில் வெளி​யாகும் இதன் கதை கொரி​யா​வில் நடக்​கிறது.

தமிழ்​நாட்​டின் சிறிய ஊரில் தனது அன்​றாட வாழ்க்கையைத் தாண்​டி, ஒரு​நாள் தென் கொரி​யா​வுக்​குப் பயணம் செய்ய வேண்​டும் என்ற கனவு செண்​பாவுக்கு இருக்​கிறது. அந்த கனவு நனவாகும் வாழ்க்​கைப் பயணத்தைச் சொல்​லும் கதை இது.

இதுபற்றி இயக்​குநர் ரா.​கார்த்​திக் கூறும்​போது, “கொரிய கலாச்​சா​ரத்​தின் மீது சிறு​வயது முதலே ஈர்ப்பு கொண்​ட​வளான செண்பா அதை அனுப​வித்​துப் பார்க்க விரும்​பு​கிறாள்.

சியோலில் எதிர்​பா​ராத வித​மாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்​கிறது. ஆனால், அவள் கற்​பனை செய்​ததை விட யதார்த்​தம் பல சவால்​களை அவள் முன் நிறுத்​துகிறது. அதைத்​தாண்டி அவளின் சுயத்தை கண்​டு​பிடிக்​கும் நெகிழ்ச்​சி​யான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரி​யா’.

கொரிய மற்​றும் தமிழ்க் கலாச்​சா​ரங்​களுக்கு இடை​யில் ஒரே மாதிரி​யான ஆழமான வரலாற்று ஒற்​றுமை​கள் என்னை ஈர்த்​தன. அந்த ஆர்​வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்​பிக்​கையூட்​டும் கதையை சொல்லத் தூண்​டியது” என்று தெரிவித்துள்ளார்.நெட்ஃபிளிக்ஸ் தளத்​தில் மார்ச் 12 முதல் இப்​படம் ப்ரீமியர் ஆகிறது.

“கொரிய - தமிழ் கலாச்சாரங்களில் வரலாற்று ஒற்​றுமை​கள்” - ‘மேட் இன் கொரியா’ இயக்குநர் தகவல்
Kohrra Season 2: மனித உணர்வுகளை அலசும் க்ரைம் த்ரில்லர் | ஓடிடி திரை அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in