‘சினிமாவுக்கும் வெப் தொடருக்கும் ஒளிப்பதிவில் அதிக வித்தியாசம் இருக்கிறது’ - ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.​பாஷா

ஃபரூக் ஜே.​பாஷா

ஃபரூக் ஜே.​பாஷா

Updated on
1 min read

தமிழில் வெளி​யான ‘பழைய வண்​ணாரப்​பேட்​டை’ படம் மூலம் ஒளிப்​ப​தி​வாள​ராக அறி​முக​மானவர், ஃபரூக் ஜே.​பாஷா. சிம்புவின் ‘பத்து தல’, செல்​வ​ராகவன் நடித்த ‘பகாசூரன்’, விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ உள்பட சில படங்​களில் பணியாற்றியுள்ள இவர் ஒளிப்​ப​திவு செய்த ‘குற்​றம் புரிந்​தவன்’ வெப் தொடர், சோனி லைவ் ஓடிடி​யில் வெளி​யாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இது தொடர்​பாக அவர் கூறிய​தாவது: ‘குற்​றம் புரிந்​தவன்’ வெப் தொடரின் திரைக்​கதை முழு​வதும் இயல்​புத்​ தன்​மை​யும், உளவியல் ஆழமும் கொண்​ட​தாக இருந்​தது; அதுவே ஒளிப்பதிவின் காட்​சி​யமைப்​பைத் தீர்​மானிக்க முக்​கிய காரணமாக அமைந்​தது. இந்த தொடர் இந்த அளவு பாராட்டுகளைக் குவிக்​கும் என நினைக்க வில்​லை. எல்​லோரும் என் பெயரைக் குறிப்​பிட்​டுப் பாராட்​டு​வது மகிழ்ச்​சி​யாக இருக்கிறது.

பொது​வாகத் திரைப்​படங்​களுக்​கும், வெப் தொடர்​களுக்​கும் ஒளிப்​ப​தி​வில் நிறைய வித்​தி​யாசம் இருக்​கிறது. படத்​தில் இருக்கும் ஹீரோ​யிஸம், உச்​சக்​கட்​டங்​கள் எது​வும் சீரிஸில் இருக்காது. அதில், இயல்​பான டிராமா இருக்​கும். இந்​தக்​ கதை, குற்​றம் புரிந்தவனின் மனநிலை சம்​மந்​தப்​பட்​டது. அதைத் திரையில் கொண்டு வர, முழு​வதும் க்ரே டோனில், நிஜத்​தில் ஒரு ரூமில் எவ்வளவு வெளிச்​சம் இருக்​குமோ அதே போல் ஒளிப்​ப​திவு செய்தோம்.

இப்​போது அதற்​குப் பாராட்​டுக் கிடைப்​பது மகிழ்ச்​சி​யளிக்​கிறது. பெரிய பீரியட் படத்​தில் பணி​யாற்ற வேண்​டும் என்​பது என் கனவு. நல்ல திரைக்​கதை, நல்ல டிராமா படங்​களில் அடுத்​தடுத்து வேலை பார்க்க ஆசை. ‘குற்​றம் புரிந்​தவன்’ வெப் தொடருக்குப்பிறகு நல்ல வாய்ப்​பு​கள் வந்து கொண்டிருக்கின்றன. இயக்​குநரின் கனவை அவர் நினைத்​தது போல், ரசிகர்​களுக்குப் பிடித்த மாதிரி திரை​யில் கொண்டு வர வேண்​டும் என்​பதே விருப்​பம். இவ்​வாறு ஃபரூக் ஜே.​பாஷா கூறினார்​.

<div class="paragraphs"><p>ஃபரூக் ஜே.​பாஷா</p></div>
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி பிளேடு நன்கொடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in