‘பவர் ரேஞ்​சர்​ஸ்’ தொடரில் வில்லியாகும் பிரி​யங்கா சோப்ரா

‘பவர் ரேஞ்​சர்​ஸ்’ தொடரில் வில்லியாகும் பிரி​யங்கா சோப்ரா
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை​யான பிரி​யங்கா சோப்​ரா, ஹாலிவுட் படங்களில் நடித்து வரு​கிறார். அவர் நடித்துள்ள ஆக் ஷன் த்ரில்லர் படமான ‘த பிளஃப்’ பிப்​ர​வரியில் வெளி​யாக இருக்​கிறது. இதில் அவர் ஆக் ஷன் காட்​சிகளி​லும் நடித்​துள்​ளார். அடுத்​து, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் மகேஷ் பாபு ஜோடி​யாக நடித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் அவர் ஹாலிவுட் தொடரில் வில்​லி​யாக நடிக்க இருப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. டிஸ்னி பிளஸ் நிறு​வனம் ‘பவர் ரேஞ்​சர்​ஸ்’ தொடரின் அடுத்த சீசனை உரு​வாக்கி வருகிறது. இதில் ரீட்டா ரெபல்சா என்கிற நெகட்​டிவ் கதா​பாத்​திரத்துக்​குப் பிரி​யங்கா சோப்ரா​வைத் தேர்வு செய்​துள்​ள​தாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளி​யாக​வில்லை என்​றாலும் பிரி​யங்கா சோப்ரா அதில் நடிக்க வாய்ப்​பிருப்​ப​தாக ஹாலிவுட்​டில் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இவர், ஏற்​கெனவே, 2017-ல் வெளி​யான ‘பே​வாட்ச்’ என்ற தொடரில் விக்​டோரியா லீட்ஸ் என்ற வில்லி கதா​பாத்​திரத்​தில் நடித்​திருந்​தார்.

‘பவர் ரேஞ்​சர்​ஸ்’ தொடரில் வில்லியாகும் பிரி​யங்கா சோப்ரா
தாத்தா காட்டிய வழி | ஆண்கள் ஸ்பெஷல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in