ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ படம் செப்.2-ல் ஓடிடியில் ரிலீஸ்

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ படம் செப்.2-ல் ஓடிடியில் ரிலீஸ்
Updated on
1 min read

ஆர்யாவின் நடிப்பில் உருவான ‘அனந்தன் காடு’ படம்  செப்டம்பர் 2-ம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’. 

ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், செப்டம்பர் 2-ம் தேதி மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தத் தகவலை மனோரமா மேக்ஸ் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.  

மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது. ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்படத்துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தைப் பற்றி ஆர்யா கூறும்போது, ‘‘அரசி​யல் பின்னணியில் உள்ள ஆக் ஷன் கதை இது. ஆனால், அரசியல் கதை இல்லை. திருவனந்​த​புரத்தை மைய​மாகக் கொண்​டு, கேரளா - தமிழ்​நாடு எல்லைப் பகு​தி​களில் நடைபெறும் கதை. எனவே படத்தில் தமிழ், மலை​யாள மொழிகள் இயல்​பாக இடம்பெறும்.” என்று தெரிவித்திருந்தார்.

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ படம் செப்.2-ல் ஓடிடியில் ரிலீஸ்
“நான் எடுத்த துணிச்சலான முடிவு...” - ‘புஷ்பா 2’ அனுபவம் பகிர்ந்த அல்லு அர்ஜுன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in