அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ நவ.20-ல் ஓடிடியில் ரிலீஸ்

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ நவ.20-ல் ஓடிடியில் ரிலீஸ்
Updated on: 
1 min read

அசோக் நடிப்பில் வெளியான ‘அன்பில் அவன்’ படம் நவம்பர் 20 அன்று ஓடிடியில் வெளியாகிறது.

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெள்ளி வந்த படம் ‘அன்பில் அவன்’. இந்தப் படத்தில் அவருடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சம்த், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு கவுதம் ராஜேந்திரன் இசையமைத்து உள்ளார்.

ஐங்​கரன் இன்​டர்​நேஷனல் மற்​றும் ஹேப்பி ஹை பிக்​சர்ஸ் சார்பில் கே.கருணா​மூர்த்​தி, அசோக் செல்​வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்​திருந்த இப்படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், நவம்பர் 20 அன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் ‘அன்பில் அவன்’ வெளியாக இருக்கிறது. இந்தத் தகவலை சோனி லைவ் தமிழ் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் காண கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ நவ.20-ல் ஓடிடியில் ரிலீஸ்
ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்’

X