ஓடிடி-​யில் ‘டாக் ஷோ’ நடத்​தும் மாதவன்

நடிகர் ஆர்.மாதவன்

நடிகர் ஆர்.மாதவன்

Updated on
1 min read

இந்தி தொலைக்​காட்​சி​யில், கடந்த 2000-ம் ஆண்​டில் பிரபல​மான டாக் ஷோ ‘ஜீனா இஸி கா நாம் ஹே’. ஜீ தொலைக்​காட்​சி​யில் வெளி​யான இதில் பாலிவுட் பிரபலங்​கள் கலந்து கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சியை மறைந்த நடிகரும் புகழ்​பெற்ற தொகுப்பாளருமான ஃபரூக் ஷேக் தொகுத்து வழங்​கி​யிருந்​தார். தற்​போது புதிய வடி​வில் இந்த டாக் ஷோ, ஜீ-5 ஓடிடி தளத்​தில் மீண்டும் அறி​முக​மாகிறது. ‘ஜீனா இஸி கா நாம் ஹே- 2.0’ என்று பெயரிடப்​பட்​டுள்ள இந்​நிகழ்ச்​சியை நடிகர் மாதவன் தொகுத்து வழங்​கு​கிறார்.

இது குறித்து மாதவன் கூறும்​போது, “இந்​திய தொலைக்​காட்சி வரலாற்​றில் மதிப்​புமிக்க நிகழ்ச்​சிகளில் ஒன்​றான ‘ஜீனா இஸி காநாம் ஹே’​யின் அடுத்த கட்ட பயணத்​தில் ஒரு பகு​தி​யாக இருப்பது எனக்​கு கவுர​வம். ஃபரூக் ஷேக் போன்ற அற்​புத​மான கலைஞர் உரு​வாக்​கிய மரபைத் தொடர்​வது பெரு​மை​யை​யும் பொறுப்​பை​யும் தரு​கிறது.

இந்​நிகழ்ச்சி வெறும் பிரபலங்​களின் வெற்​றிக் கதைகளைப் பற்றி மட்​டுமல்ல; அவர்​களை உரு​வாக்​கிய மனிதர்​கள், உறவு​கள், அனுபவங்​கள் மற்​றும் வாழ்க்​கைப் பயணத்​தைப் பற்​றியது. இந்த உணர்​வுப்​பூர்​வ​மான கதைகளை புதிய தலை​முறை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்​கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்​சி​யாக உள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகர் ஆர்.மாதவன்</em></p></div>
ஏஐ மூலம் போலி வங்கி செயலி உருவாக்கியவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in