‘ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக்குவித்த ‘ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ்’ (TriangleOfSadness) திரைப்படம் மே 12-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபன் ஆஸ்ட்லண்ட் இயக்கத்தில் ஹாரீஸ் டிகின்சன், சார்ல்பி டீன், டோலி டி லியோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘‘ட்ரையாங்கிள் ஆஃப் சாட்னஸ்’. நடந்து முடிந்த 95ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பால்ம்டிஓர் (Palme d’Or) விருதைப் பெற்றது.

பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களின் கப்பல் பயணத்தையும் அதை தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளையும் ப்ளாக் காமெடி ஜானரில் பதிவு செய்திருக்கும் இப்படம் உலக அளவிலான திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் படம் வரும் மே12-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in