Published : 15 Feb 2023 04:01 PM
Last Updated : 15 Feb 2023 04:01 PM

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் புதிய சாதனை படைத்த அஜித்தின் ‘துணிவு’

அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதல் 5 இடங்களில் இடம்பெற்ற முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலையொட்டி ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர், ஜான்கொக்கேன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். உலக அளவில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் டாப் ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், தற்போது ‘நான் இங்கிலீஷ்’ (Non - English) படப் பிரிவுகளில் உலக அளவில் டாப் 10 வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளது ‘துணிவு’. 4-வது இடத்தில் ‘துணிவு’ படத்தின் இந்தி வெர்ஷன் இடம்பிடித்துள்ளது.

இந்தியப் படம் ஒன்று உலக அளவிலான ட்ரெண்டிங்கில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்திருப்பது இதுவே முதன்முறை. இந்த பெருமையை அஜித்தின் ‘துணிவு’ பெற்றிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x