ஜன.15-ல் ஓடிடியில் வெளியாகிறது ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’

ஜன.15-ல் ஓடிடியில் வெளியாகிறது ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’
Updated on
1 min read

ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் வரும் ஜனவரி 15-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜீவா நடித்த படம் ‘வரலாறு முக்கியம்’. சந்தோஷ்ராஜன் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தில் காஷ்மீரா பர்தேசி, பிரக்யா நக்ரா, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திரையரங்குகளில் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காத இந்தப் படம் வரும் ஜனவரி 15-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in