Published : 02 Nov 2022 04:55 PM
Last Updated : 02 Nov 2022 04:55 PM

நவ.19-ல் ஓடிடியில் வெளியாகிறது சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வரும் நவம்பர் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'காட்ஃபாதர்'. மலையாளத்தில் வெளியான 'லூசிபர்' படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். படத்தில் சல்மான் கான், பூரி ஜெகன்னாந்த், சத்ய தேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தெலுங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.110 கோடி அளவில் வசூலை குவித்தது. இந்நிலையில், படம் வரும் நவம்பர் 19-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x