Published : 27 Aug 2022 03:05 PM
Last Updated : 27 Aug 2022 03:05 PM

செப்.2-ல் ஓடிடியில் வெளியாகிறது ‘மை டியர் பூதம்’

பிரபுதேவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'மை டியர் பூதம்' திரைப்படம் செப்டம்பர் 2-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது.

'மஞ்சப்பை', 'கடம்பன்' படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மை டியர் பூதம்'. அஸ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். குழந்தைகளுக்கான ஃபான்டஸி படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், 'மை டியர் பூதம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி நடிப்பில் கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'வேழம்' திரைப்படம் அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x