புனித் ராஜ்குமாரின் ’ஜேம்ஸ்’ படம் வியாழக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்

புனித் ராஜ்குமாரின் ’ஜேம்ஸ்’ படம் வியாழக்கிழமை ஓடிடியில் ரிலீஸ்
Updated on
1 min read

மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமாரின் கடைசி படமான ’ஜேம்ஸ்’ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 17-ம் தேதி அவரது பிறந்தநாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சேத்தன் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் புனித் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். மேலும், புனித்தின் அண்ணன்கள் சிவ ராஜ்குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

'கேஜிஎஃப்' படத்திற்குப் பிறகு ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த இரண்டாவது கன்னடப் படம் என்ற பெருமையை பெற்றிருந்தது 'ஜேம்ஸ்' திரைப்படம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், 'ஜேம்ஸ்' திரைப்படம் நாளை சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in